ஒவ்வொரு புத்தாண்டு அன்றும்  ஒரு புதிய பழக்கத்தை உருவாக்குவதற்கான புத்தாண்டு தீர்மானத்தை நீங்கள் எப்போதாவது எடுத்துள்ளீர்களா? பொதுவாக நாம் எடுக்கும் புத்தாண்டு தீர்மானங்களை நாம்  ஒரு சில நாட்களுக்கு மேல் அதைப் பின்பற்றுவதில்லை.  எனவே நாம்  புத்தாண்டு தீர்மானம் எடுக்கும் பழக்கவழக்கத்தை கைவிட்டுவிடுகிறோம். ஆனால் இந்த ஆண்டு HOPE 3 மாணவர்களுடன் சேர்ந்து இந்த அற்புதமான முயற்சியில் ஈடுபடுவோம்.முந்திய புத்தாண்டு  தீர்மானங்கள்  போலல்லாமல், புதிய பழக்கவழக்கத்துடன், புதிய வாழ்க்கை முறையுடன் புத்தாண்டுக்குள் நடக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வரவிருக்கும் புத்தாண்டு 2020 க்கு முன்னர் ஒரு பழக்கத்தை உருவாக்க உள்ளோம்.

 

செப்டம்பர் 23 முதல் டிசம்பர் 31 வரை 100 நாட்கள் ஆகும்.  இந்த 100 நாட்களுக்குள் நாம் ஒரு புதிய பழக்கத்தை கடைப்பிடிப்போம்.  2020 ஆம் ஆண்டு நமது அப்துல் கலாம் அய்யாவின் கனவு ஆண்டு. வரும் 2020 ஐ வரவேற்க புதிய வழியை கண்டறிந்து ஒரு புதிய பழக்கத்துடன் நம்மை உயர்த்திக் கொள்வோம் .  எனவே நாளை செப்டம்பர் 23 முதல் டிசம்பர் 31 வரை அதைப் பின்பற்றவுள்ளோம். இதை நாமே ஒரு சவாலாக ஏற்றுக்கொள்ளவுள்ளோம். இந்த முயற்சியில் எங்களை ஊக்கப்படுத்த நீங்கள் அனைவரும் எங்களுடன் எவ்வாறு சேரலாம் என்பதை தெரிந்துகொள்ளும் முன், “Atomic Habits” புத்தகத்திலிருந்து ஒரு சிறிய  பகுதியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம் .
 

பழக்கவழக்கங்கள் நீங்கள் எடுக்கும் சிறிய முடிவுகள் மற்றும் ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யும் செயல்கள்.  ஒவ்வொரு பழக்கத்தின் விதை ஒற்றை, சிறிய முடிவு.  ஆனால் முடிவு மீண்டும் மீண்டும் செய்யப்படுவதால், ஒரு மரமாக முளைத்து வலுவடைகிறது. Duke பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, "நமது பழக்கவழக்கங்கள் ஒருநாளின் 40 சதவீத நடவடிக்கைகளை சார்ந்துள்ளது. அவை தினமும் நமது வாழ்வியல் நடவடிக்கையில் சேர்ந்துக்கொண்டே போகும்". 
நீங்கள் எந்த நிலையில்  இருக்கிறீர்கள்? அல்லது நிலையில் வெளியே அடையாளம் காணப்படுகின்றனர்? என்பதை நமது பழக்கவழக்கங்களே தீர்மானிக்கின்றன. உங்கள் பழக்கத்தின் விளைவாக நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக அல்லது மகிழ்ச்சியற்றவராக இருக்கிறீர்கள்?  உங்கள் பழக்கத்தின் விளைவாக நீங்கள் எவ்வளவு வெற்றிகரமானவர் அல்லது தோல்வியுற்றவர்? உங்கள் பழக்கத்தின் விளைவாக நீங்கள் மீண்டும் மீண்டும் என்ன செய்கிறீர்கள் (அதாவது ஒவ்வொரு நாளும் நீங்கள் சிந்திக்கவும் செய்யவும் என்ன செலவிடுகிறீர்கள்) இறுதியில் நீங்கள் யார், நீங்கள் நம்பும் விடயங்கள் மற்றும் நீங்கள் சித்தரிக்கும் ஆளுமை ஆகியவற்றை உருவாக்குகிறது. எல்லா பெரிய விடயங்களும் சிறிய தொடக்கங்களிலிருந்து வருகின்றன. எனவே, நீங்கள் எங்களுடன் எவ்வாறு சேரலாம், நீங்கள் எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடலாம் மற்றும் இந்த சவாலுக்கு எங்களுடன் சேர்ந்துக் கொள்ளலாம்.

 

எண்ணமே செயலாகிறது...
செயல் பழக்கமாகிறது...
பழக்கம் நடைமுறையாகிறது...
வாழ்வாகிறது ..
மனோ தத்துவ அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட உண்மை...

மேலும், எங்களுடன் இணைந்து ஒரு புதிய வாழ்க்கை முறையை நோக்கி பயணிப்பதற்கு தயாராக உள்ளவர்கள், பக்கத்தில் கொடுக்க பட்டு உள்ள பெட்டியில்  மின்னஞ்சலை பூர்த்தி செய்து subscribe செய்யவும்.

©2019 by Hope3 Foundation.